60 லீற்றர் தாய்ப்பாலை தானமாக வழங்கிய இந்திய பிரபலம்!

#SriLanka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
60 லீற்றர் தாய்ப்பாலை தானமாக வழங்கிய இந்திய பிரபலம்!

இந்தியாவிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சுமார் 60 லீற்றர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கியுள்ளதாக இந்தியாவின் முன்னாள் பெட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா (42) குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த ஜுவாலா கட்டா - நடிகர் விஷ்ணு விஷால் தம்பதியினருக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

அவர்களின் குழந்தைக்கு 'மீரா' என்று பொலிவுட் நடிகர் அமீர்கான் பெயர் சூட்டினார்.

இந்த நிலையில், ஜுவாலா கட்டா தனது குழந்தைக்கு தேவையானது போக, எஞ்சிய தாய்ப்பாலை அரச மருத்துவமனைகளுக்குத் தானமாக வழங்கி உள்ளார்.

அந்த வகையில் சுமார் 60 லீற்றர் தாய்ப்பாலை ஹைதராபாத் மற்றும் சென்னையில் உள்ள அரச மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கியதாக அவர் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் பதிவிட்டுள்ளார்.

இந்தத் தானமாகப் பெறப்படும் பால், குழந்தையின் ஆரம்பகால முக்கியமான நாள்களில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் ஊட்டச்சத்தையும் வழங்கி, ஒரு முக்கியப் பாலமாகச் செயல்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4