தமிழினப்படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் அணி திரழ அழைப்பு (வீடியோ இணைப்பு)

#SriLanka #Mullaitivu #Mullivaikkal #Anniversary
Soruban
1 month ago
தமிழினப்படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் அணி திரழ அழைப்பு (வீடியோ இணைப்பு)

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூத்தியாகியுள்ளது .

அந்தவகையில் தமிழின படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளான நாளை (18) காலை 6 மணிதொடக்கம் 9.30மணிவரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர் நீத்தவர்களுக்குரிய பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகள் இடம்பெறவுள்ளது.

அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் காலை 10.15 மணிக்கு கொள்கைப்பிரகடனம் வாசிக்கப்படும் 10.29 க்கு நினைவொளிக்கு நினைவொளி எழுப்பபடும். 10.30 க்கு அகவணக்கமும் 10.31 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு சமநேரத்திலே ஒற்றைச் சுடரொளி ஏற்றப்பட்டு 10.35 மணிக்கு மலர் வணக்கம் செலுத்தப்படும்.

பொதுச் சுடரேற்றப்பட்டு தமிழினப்படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4