படிப்படியாக வலுப்பெறும் தென்மேற்கு பருவ மழை!

#SriLanka #weather #Rain #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
படிப்படியாக வலுப்பெறும் தென்மேற்கு பருவ மழை!

தென்மேற்கு பருவமழை நாட்டின் பல பகுதிகளில் படிப்படியாக நிலைப்பெற்று வருகிறது. 

இதற்கமைய இன்று (19), மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

பிற்பகல் 2.00 மணிக்கு மேல் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னருவ மாவட்டத்திலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை மேலும் தெரிவித்துள்ளது. 

இதேவேளை  மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு சுமார் (30-40) கி.மீ வேகத்தில் ஓரளவு பலமான காற்று வீசக்கூடும். 

 இடியுடன் கூடிய மழை, தற்காலிகமாக ஏற்படும்  பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4