வாகன இறக்குமதிக்காக 03 மாதங்களில் 600 மில்லியன் செலவு!
2026 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக இலங்கை ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட அதிக அந்நியச் செலாவணியைச் செலவிட வாய்ப்புள்ளதாக மத்தியவங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த ஆண்டு வாகன இறக்குமதிக்காக ஏறக்குறைய 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், இது முன்னர் கணிக்கப்பட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான தொகையை விட அதிகமாகும் என்றும் தெரிவித்தார்.
அதிகரித்த இறக்குமதி அளவானது, வாகன இறக்குமதி மீது வசூலிக்கப்படும் வரிகள் மற்றும் தீர்வைகள் மூலம் திறைசேரிக்கு அதிகரித்த வருவாயையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வாகன இறக்குமதிக்காக ஏறக்குறைய 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த ஆண்டின் எஞ்சிய காலத்திலும் தற்போதைய போக்கு தொடர்ந்தால், மொத்த வாகன இறக்குமதி செலவினம் ஆண்டின் இறுதியில் சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )