பீர் உற்பத்திக்கு அரிசி மற்றும் சீனியைப் பயன்படுத்த தடை - மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு!

#SriLanka #sugar #Lanka4 #Ban #Case #beer #Court #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
பீர் உற்பத்திக்கு அரிசி மற்றும் சீனியைப் பயன்படுத்த தடை - மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு!

பீர் உற்பத்திக்காக அரிசி மற்றும் சீனியை முதன்மை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என மதுவரி ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினருக்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பேராணை மனு, நேற்று (18) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அனுமதிப்பத்திரம் பெற்ற மதுபான சில்லறை விற்பனையாளர்கள் குழுவொன்றினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மதுவரி ஆணையாளர் நாயகம், மதுவரித் திணைக்கள அதிகாரிகள், இலங்கை தரக்கட்டளை நிறுவனம், காவல்துறை மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட பல தரப்பினர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ், பீர் (Beer) என்பது 'முளைக்கட்டிய தானியத்தில்' இருந்து தயாரிக்கப்படும் ஒரு புளித்த மதுபானம் என வரையறுக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போதுள்ள பெரும்பாலான உற்பத்தியாளர்கள் பீர் உற்பத்திக்காக அரிசி மற்றும் சீனியை முதன்மை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துகின்றனர். இது அப்பட்டமான மதுவரிச் சட்ட விதிகளுக்கு முரணான செயலாகும்.

 அரச நிதியின் கீழ் பாரிய பொது மானியங்களுடன் (Subsidy) விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் அரிசி, பீர் உற்பத்தி போன்ற வணிகத் தொழில்துறைகளுக்குத் திருப்பி விடப்படுகிறது.

பொருளாதாரப் பின்னடைவும் ஒழுங்குமுறை குறைபாடும் உணவுக்கான அரிசி மதுபான உற்பத்திக்குத் திருப்பி விடப்படுவது தேசிய பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், அரிசி உற்பத்தியில் இலங்கை சுயசார்பை அடைவதில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.

மேலும், மதுபான உற்பத்தித் தரங்களைக் கண்காணிப்பதற்கான தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, இலங்கை தரக்கட்டளை நிறுவனம் தனது ஒழுங்குமுறை கட்டமைப்பைப் புதுப்பிக்கத் தவறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, பீர் தயாரிப்பில் அரிசி மற்றும் சீனியை முதன்மை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துவதற்கு மதுவரி ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட பிரதிவாதிகள் அனுமதி வழங்குவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் நீதிமன்றைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4