தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற விசேட குழு அவசர அழைப்பு!

#SriLanka #Election #Parliament #Lanka4 #Member #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற விசேட குழு அவசர அழைப்பு!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட குழுவின் முன்னிலையில் நாளை (21) முன்னிலையாகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விசேட குழுவினால் விடுக்கப்பட்ட இந்த அழைப்பைத் தமக்குக் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான குழு மாகாண சபைத் தேர்தலை தற்போதைய சூழலில் எந்தவொரு தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், அதற்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்குமாக அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் இந்த விசேட நாடாளுமன்றக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

இக்குழு ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் கூடி பல்வேறு தரப்பினருடனும் ஆலோசனைகளை நடத்தியுள்ளது. சட்டத் தடைகள் குறித்து ஆராய்வு இதேவேளை, அண்மையில் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் இந்த விசேட குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர். 

இதன்போது, மாகாண சபைத் தேர்தலை தடையின்றி நடத்துவதில் உள்ள சட்ட ரீதியான சிக்கல்கள் மற்றும் தடைகள் குறித்து விரிவான அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்குமாறு அக்குழுவினால் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, தேர்தலை நடத்துவதற்கான அடுத்தகட்ட தொழில்நுட்ப மற்றும் நடைமுறைச் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயும் நோக்கிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நாளை நாடாளுமன்ற விசேட குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் நீண்டகாலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான முதற்கட்ட நகர்வுகள் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!