மோட்டார் சைக்கிள் விபத்தில் 19 வயது பாடசாலை மாணவன் பரிதாபமாக பலி!

#SriLanka #Death #Accident #Lanka4 #ADDA #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
மோட்டார் சைக்கிள் விபத்தில் 19 வயது பாடசாலை மாணவன் பரிதாபமாக பலி!

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள 64 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில்  இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் மூதூர் -ஆணைச்சேனை பகுதியை சேர்ந்த 19 வயது றிஸ்வான் சிப்கி எனும் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதுடன் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் இளைஞரும் காயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது – மோட்டார் சைக்கிளில் 2 இளைஞர்களும் தோப்பூரிலுள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று , மீண்டும் மூதூருக்கு வரும் வழியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விளகி இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது.

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த இளைஞனும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!