அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் யாழ். எம்பி அர்ச்சுனா சந்திப்பு:

#India #SriLanka #Tamil Nadu #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY
Abi
1 month ago
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் யாழ். எம்பி அர்ச்சுனா சந்திப்பு:

தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம்(18) தமிழக அரசின் தலைமைச் செயலகத்திற்கு விஜயம் செய்தனர். 

அங்கு, தமிழக அரசின் பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 

குறித்த சந்திப்பு தொடர்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், இலங்கை நாடாளுமன்ற எம்.பி திரு. இராமநாதன் அர்ச்சுனா அவர்களை இன்று(18) மரியாதை நிமித்தமாக தலைமைச் செயலகம் அலுவலகத்தில் சந்தித்து உரையாடினேன்.

இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நல்லுறவு, தமிழ் மக்களின் நலன், மீனவர் பாதுகாப்பு, ஒன்றுபட்ட வளர்ச்சி ஆகிய விஷயங்கள் குறித்து நட்பு ரீதியாகக் கலந்துரையாடினோம். தமிழ் மக்களின் நல்வாழ்வு மற்றும் வளமான வருங்காலம் என்ற புள்ளியில் ஆரோக்கியமான உறவில் பயணிப்போம் என்று ஒருவொருக்கொருவர் தெரிவித்து மகிழ்ந்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவோடு அவரது கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4