மலையக மக்களுக்கு காணி உரிமை வேண்டி நடை பயணத்தை ஆரம்பித்துள்ள 07 வயது சிறுவன்!

#SriLanka #land #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
மலையக மக்களுக்கு காணி உரிமை வேண்டி நடை பயணத்தை ஆரம்பித்துள்ள 07 வயது சிறுவன்!

மலையக மக்களின் காணி உரிமைகளை வென்றெடுப்பது குறித்தும், அது தொடர்பாக அரசாங்கம் மற்றும் பொறுப்பு வாய்ந்த தரப்பினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும்  07 வயது சிறுவன் ஒருவர் நடை பயணத்தை ஆரம்பித்துள்ளார். 

லிந்துலை சரஸ்வதி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும்   பிரேமராஜா கார்கி  என்ற சிறுவனே மேற்படி நடை பயணத்தை ஆரம்பித்துள்ளார். 

தலவாக்கலை நகரில் இருந்து கொழும்பு ஜனாதிபதி செயலகம் மற்றும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் ஆகியவற்றுக்குத் தனது கோரிக்கை அடங்கிய கடிதங்களைக் கையளிப்பதற்காக அவர் இந்த பயணத்தை ஆரம்பித்துள்ளார். 

சுமார் 200 வருடங்களாக மலையக மண்ணில் எவ்வித உரிமையும் இன்றி தவிக்கும் அம்மக்களுக்காக 07 வயது சிறுவன் நடை பயணத்தை ஆரம்பித்திருப்பது அனைவர் மத்தியிலும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4