கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள டிரம்ப் நிர்வாகம்

#Flight #America #Attack #Lanka4 #Case #Cuba #Former President
Prasu
1 month ago
கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள டிரம்ப் நிர்வாகம்

மியாமியைத் தளமாகக் கொண்ட 'பிரதர்ஸ் டு தி ரெஸ்க்யூ' என்ற நாடுகடத்தப்பட்டோர் குழுவால் இயக்கப்படும் விமானங்களை 1996ல் சுட்டு வீழ்த்தியது தொடர்பாக, கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோ மீது அமெரிக்க மத்திய அரசு வழக்கறிஞர்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இந்தக் குற்றப்பத்திரிகை, வாஷிங்டனுக்கும் ஹவானாவுக்கும் இடையிலான பதட்டங்கள் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமாக அதிகரித்துள்ள நிகழ்வுகளில் ஒன்றாகும்.

1996ம் ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி இரண்டு பொதுமக்கள் விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதற்காக கியூபாவின் போர் விமானங்களைப் பயன்படுத்தும் முடிவில், அப்போதைய கியூபா பாதுகாப்பு அமைச்சராக இருந்த காஸ்ட்ரோ முக்கியப் பங்கு வகித்ததாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டுகிறது.

அமெரிக்கக் குடிமக்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக ஒரு குற்றச்சாட்டும் நான்கு கொலைக் குற்றச்சாட்டுகளும் இரண்டு விமானங்களை அழித்த குற்றச்சாட்டுகளும் காஸ்ட்ரோ மீது சுமத்தப்பட்டுள்ளன.

1996ம் ஆண்டு நடந்த இந்தத் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவிற்கு கியூபர்கள் பெருமளவில் குடிபெயர்ந்த காலகட்டத்தில், 1991ம் ஆண்டில் 'பிரதர்ஸ் டு தி ரெஸ்க்யூ' அமைப்பு செயல்படத் தொடங்கியது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4