இன்றைய ராசிபலன் (21.05.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4news #L4
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் (21.05.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

உங்கள் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அதே நேரம் வேலைச்சுமையும் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்க நல்ல கமிஷன் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.

ரிஷபம்

காதல் வெற்றியாகும். தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும். பிள்ளைகள் சொல்படி நடப்பர். அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். எங்கு சென்றாலும் உங்களுக்கு செல்வாக்கு இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை.

மிதுனம்

மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். படிப்பில் நன்கு ஆர்வம் பிறக்கும். வரண் தேடுபவர்களுக்கு நல்ல வரண் அமையும். அரைகுரையாக முடிக்க முடியாத வீடு கட்டும் பணி மீண்டும் துவங்கும். வங்கிக்கடன் உதவி கிடைக்கும்.

கடகம்

புதிய வாகனம் வாங்க திட்டுமிடுவீர்கள். பழைய வீட்டை சீர் செய்வீர்கள். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். லாபத்தை அதிகரிப்பர். தம்பதிகளிடையே விட்டுக் கொடுப்பர். உங்கள் வீட்டில் பணிபுரிபவர்கள் உண்மையாக இருப்பர். அவர்கள் தேவையை பூர்த்தி செய்வீர்கள். உடல் நலம் சிறக்கும்.

சிம்மம்

நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. அரசியல்வாதிகளுக்கு கட்சியில் நல்ல பொறுப்பு கிடைக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். திடீர் பயணங்கள் ஏற்படும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். தம்பதிகளின் அன்பு பலப்படும்.

கன்னி

எதிர்வீட்டுக்காரருடன் இருந்த சச்சரவு விலகும். சில்லரை வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். ஷேர் மூலமாக பணம் வரும். வசதி, வாய்ப்புகள் கூடும். முயற்சி செய்த காரியம் முடியும் வரை வெளியிடாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் வேற்று மொழியினைக் கற்க ஆர்வம் கொள்வர். உடல் நலம் சிறப்படையும்.

துலாம்

குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். உங்களுக்குரிய பங்குத் தொகை வந்து சேரும். தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்பவர்கள் வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்கும்.

விருச்சிகம்

குடும்பத்தை பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள். ஒரு சிலருக்கு புதிய நிறுவனத்தில் வேலையில் அமர்வார்கள். விற்க முடியாத காலி மனையை தேடி வாடிக்கையாளர்கள் வருவர். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். உடல் நலம் சரியாகும்.

தனுசு

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

மகரம்

காதலர்கள் பொறுப்புணர்வர். மார்கெட்டிங் பிரிவினர்கள் அதிக ஆர்டர்களை குவிப்பர். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர். குடும்பத் தலைவிகள் தங்கள் விருப்பம் போல் தங்கள் கணவர் தங்களுக்கு வீட்டிற்கு தேவையானதை வாங்கி குவிப்பார். சொத்து வாங்குவது, விற்பது போன்ற நிலம் வீடு சம்பந்தப்பட்டவைகளில் லாபமாக முடியும்.

கும்பம் 

குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வழக்கு சம்பந்தமாக சற்று விட்டுக் கொடுத்து சமாதானமாக போவது நலம் தரும். திருமணமான புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் அதிக முயற்சியின் பேரில் இடம் கிடைக்கும். 

மீனம்

தந்தையின் சொல்லுக்கு செவி சாய்ப்பது நலம் தரும். சரியான வேலை அமையாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். பழைய கடன்கள் அடைபடும். சொந்த பிளாட், நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை கூடி வரும். புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!