வலுப்பெறும் தென்மேற்குப் பருவமழை : பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

#SriLanka #weather #Rain #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
வலுப்பெறும் தென்மேற்குப்  பருவமழை : பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

தென்மேற்குப் பருவமழை நாட்டின் மீது படிப்படியாக நிலைப் பெற்று வருகின்றது. 

இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தப் பகுதிகளில் சிலவற்றில் 50 மி.மீ-க்கு மேல் கணிசமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல சுற்று மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்  ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் ஓரளவு பலமான காற்று வீசக்கூடும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4