கட்டுநாயக்க - எல்லே இடையே புதிய பஸ் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை!

#SriLanka #Bus #Lanka4 #service #Katunayaka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
கட்டுநாயக்க - எல்லே இடையே புதிய பஸ் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை!

பொத்துவில் பிரதேசத்தின் சுற்றுலாத்துறை மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு, பொத்துவிலில் இருந்து கட்டுநாயக்க மற்றும் எல்லே ஆகிய தூர இடங்களுக்கான புதிய பஸ் சேவைகளை ஆரம்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் வாஸித், இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தவிசாளரிடம் கேட்டுக்கொண்டார்.

இலங்கை போக்குவரத்து சபையின் தவிசாளரை நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் வாஸித் சந்தித்து கலந்துரையாடிய போதே இக்கோரிக்கையை முன்வைத்தார்.

பொத்துவில் பிரதேசம் சர்வதேச ரீதியில் சுற்றுலாத்துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாக இருப்பதுடன், நாள்தோறும் அதிகளவிலான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தரும் முக்கிய மையமாகவும் திகழ்கிறது.

எனவே, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து வசதிகளை இலகுபடுத்தும் நோக்கில், கட்டுநாயக்க மற்றும் எல்லே போன்ற பகுதிகளுக்கான புதிய பஸ் சேவைகளை உடனடியாக ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்தப்பட்டது.

மேலும், பொத்துவில் பஸ் டிப்போவில் (Depot) நீண்டகாலமாக நிலவி வரும் ஆளணி பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதுடன், அங்குள்ள கட்டமைப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினரால் எடுத்து கூறப்பட்டது.

இக்கோரிக்கைகளை ஆராய்ந்த இலங்கை போக்குவரத்து சபையின் தவிசாளர், இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4