பிள்ளையானை முறையாக விசாரித்தால் உண்மை வெளிவரும் - சாணக்கியன்(வீடியோ இணைப்பு )

#SriLanka #Lanka4 #pillaiyan #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
பிள்ளையானை முறையாக விசாரித்தால் உண்மை வெளிவரும் - சாணக்கியன்(வீடியோ இணைப்பு )

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் தனது உறுதியான நிலைப்பாட்டைச் சபையில் அறிவிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (21) நடைபெற்ற அமர்வின்போது, நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

அரசியல் கைதிகள் சாதாரண குற்றவாளிகள் அல்லர் தாம் நம்பிக்கை வைத்த அரசியல் கொள்கைக்காகவே தமிழ் அரசியல் கைதிகள் அன்று ஆயுதம் ஏந்திப் போராடினார்களே தவிர, அவர்களைச் சாதாரண குற்றவாளிகளைப் போன்று பார்க்க முடியாது எனச் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

"மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) கடந்த காலப் போராட்டங்களின் போது அதன் உறுப்பினர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படாமல் இருந்திருந்தால், இன்று பலர் பாராளுமன்றப் பதவிகளில் இருந்திருக்க முடியாது. 

அப்படியிருக்க, தமிழ் அரசியல் கைதிகளுக்கு மாத்திரம் ஏன் இன்றும் அநீதி இழைக்கப்படுகிறது? இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்களின் விவகாரம் குறித்து தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே ஜனாதிபதி இதில் தனிப்பட்ட கரிசனை காட்ட வேண்டும்." சுரேஸ் சலே கைது வரவேற்பு - பிள்ளையானை விசாரிக்கக் கோரிக்கை உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில், முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஸ் சலே கைது செய்யப்பட்டுள்ளமையை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வரவேற்றார். 

அதேநேரம், இந்தத் தாக்குதல்களின் பின்னணியிலுள்ள உண்மைகளைக் கண்டறிய பிள்ளையானை (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) முறையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் மட்டக்களப்பு நூலகமும் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்தும் வடக்கு-கிழக்கு மக்கள் இன்னும் நீதி கோரிப் போராடி வருவதாகவும், கடந்த வாரம் முழுவதும் அங்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், மட்டக்களப்பு பொது நூலகத்தின் எஞ்சிய கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்கு இன்னும் சுமார் 300 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாகவும், இந்தத் தேவையை நேரில் காண்பிப்பதற்காகவே அண்மையில் ஜனாதிபதியை மட்டக்களப்பிற்கு அழைத்திருந்ததாகவும் சாணக்கியன் எம்.பி மேலும் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4