"அடிப்படயற்ற குற்றச்சாட்டுகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு" கோரிக்கை!

#SriLanka #Parliament #Gajendrakumar Ponnambalam #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
"அடிப்படயற்ற குற்றச்சாட்டுகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு" கோரிக்கை!

"குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அந்தப் பெண்ணை நான் எனது வாழ்க்கையில் ஒருபோதும் சந்தித்ததே இல்லை" என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் குற்றச்சாட்டுக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் கடும் கண்டனமும் எதிர்ப்பும் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வின் போதே இருவருக்குமிடையே இந்த காரசாரமான விவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டது. அர்ச்சுனாவின் குற்றச்சாட்டும் கஜேந்திரகுமாரின் பதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைக் குறிவைத்துச் சபை நடுவே கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். 

இதனால் ஆத்திரமடைந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துக் கொந்தளித்தார். "நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா என் மீது அபாண்டமான பழிச்சொற்களைச் சுமத்துகிறார். 

அவர் குறிப்பிடும் அந்தப் பெண்ணை நான் நேரில் பார்த்ததோ, சந்தித்ததோ கிடையாது. சபை வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி, எவ்வித ஆதாரமும் இன்றி இவ்வாறான அநாகரிகமான அரசியல் சேறுபூசல்களை மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த விவகாரம் காரணமாக நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு தமிழ்க் காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையின் கண்ணியத்தைப் பேண வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4