போன் தொலைந்துவிட்டதா அல்லது திருடப்பட்டுவிட்டதா? -பொலிஸார் முக்கிய எச்சரிக்கை!

#SriLanka #Police #Lanka4 #Warning #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
போன் தொலைந்துவிட்டதா அல்லது திருடப்பட்டுவிட்டதா? -பொலிஸார் முக்கிய எச்சரிக்கை!

நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு, கையடக்கத் தொலைபேசிகள் தொலைந்து போதல் மற்றும் திருடப்படுதல் தொடர்பான முறைப்பாடுகள் நாளாந்தம் பெருமளவில் கிடைத்து வருவதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான தொலைபேசிகள் தவறான நபர்களின் கைகளுக்குச் செல்வது, உரிமையாளர்களுக்குப் பாரிய சட்டப் சிக்கல்களையும் ஆபத்துகளையும் ஏற்படுத்தும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

தொலைபேசி தொலைந்தவுடன், தொடர்புடைய தொலைத்தொடர்பு சேவை வழங்குநரைத் தொடர்புகொண்டு உடனடியாக சிம் அட்டையை (SIM Card) செயலிழக்கச் செய்ய வேண்டும். இது உங்கள் எண்ணைப் பயன்படுத்தி பிறர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் போது, தொலைபேசியின் IMEI எண்ணை கட்டாயம் வழங்க வேண்டும். (உங்கள் தொலைபேசியின் IMEI எண்ணை அறிய *#06# ஐ டயல் செய்து குறித்துக் கொள்ளவும்). தொலைந்த தொலைபேசிகளைக் கண்டறிய இலங்கை பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ineed.police.lk என்ற இணையதளத்தில் உடனே விபரங்களைப் பதிவு செய்யவும்.

பிறருக்குச் சொந்தமான தொலைபேசியை தன்னிடம் வைத்திருப்பது இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் 'குற்றவியல் முறைகேடு' (Criminal Misappropriation) ஆகும். இதற்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 

எனவே, கண்டெடுக்கப்படும் தொலைபேசிகளை உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து ரசீது பெற வேண்டும். திருடப்பட்ட தொலைபேசிகளை மலிவான விலையில் வாங்கி வைத்திருப்பது குற்றமாகும். 

இதற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம். இரண்டாம் நிலை (Second-hand) தொலைபேசிகளை வாங்கும் போது, அவை திருடப்பட்டவை அல்ல என்பதை 'I Need' இணையத்தளத்தின் "Find Genuine Phone" வசதியைப் பயன்படுத்திச் சரிபார்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் மட்டும் ஆயிரக்கணக்கான தொலைபேசிகளை மீட்டெடுத்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், சந்தேகத்திற்குரிய வகையில் போன்களை வைத்திருப்பவர்கள் மீது தொடர்ந்தும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!