உயரும் வட்டி விகிதம் : மக்கள் தலையில் இறக்கிவைக்கப்படும் பாரிய சுமை!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
உயரும் வட்டி விகிதம் : மக்கள் தலையில் இறக்கிவைக்கப்படும் பாரிய சுமை!

இலங்கை மத்திய வங்கியானது வரும் வாரத்திற்குள் வட்டி விகிதத்தை குறைந்தபட்சம் 50 அல்லது 100 அடிப்படைப் புள்ளிகள் அல்லது 0.5% அல்லது 01 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.

 நாடாளுமன்றத்தில் இன்றைய விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், வட்டி விகிதங்கள் இவ்வாறு அதிகரித்தால், அதன் நேரடி விளைவாக மக்கள் மீது விதிக்கப்படும் வரிகளின் அளவை மேலும் அதிகரிக்க வேண்டியிருக்கும்.

 நிதி அமைச்சகம், மத்திய வங்கி மற்றும் திறைசேரி ஆகியவை சந்தைக் கொள்கைகளைக் கொண்டுள்ளன என்றும், சம்பந்தப்பட்ட தரப்பினர் அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 இல்லையெனில், இந்தத் தீய சுழற்சி தொடர்ந்து நீடிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார். “அரசியல் மேடையில் எவ்வளவுதான் பேசப்பட்டாலும், அது பயனற்றது. சந்தை அரசாங்கத்தை நம்பவில்லை. 

துரதிர்ஷ்டவசமாக, அரசாங்கம் செலுத்த வேண்டிய வட்டியை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்பதே தற்போது நடந்து கொண்டிருக்கிறது,” என்று அவர் கூறினார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4