லயன் அறைகளிலேயே வாழ்ந்தோம். அந்த வேதனைகள் எமக்குத் தெரியும் (வீடியோ இணைப்பு)

#SriLanka #Lanka4 #Pain #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
லயன் அறைகளிலேயே வாழ்ந்தோம். அந்த வேதனைகள் எமக்குத் தெரியும் (வீடியோ இணைப்பு)

மலையக மக்களின் 200 வருட கால அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான அனைத்து முறையான வேலைத்திட்டங்களையும் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற, "மலையக மக்கள் எதிர்கொண்டு வரும் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள்" குறித்த அவசர சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

"மலையக மக்கள் கடந்த ஏழு தலைமுறைகளாகத் தங்களது இன்னுயிர்களையும், உழைப்பையும் பணையம் வைத்து இந்நாட்டின் பொருளாதாரத்திற்காக உழைத்தவர்கள். 

அவர்களுக்கு முழு நாடும் கடமைப்பட்டுள்ளது" என அமைச்சர் தனது உரையில் நன்றியறிதலுடன் குறிப்பிட்டார். பிரித்தானியர்களால் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட காலம் தொட்டு அவர்கள் அனுபவித்த இன்னல்கள் கொடூரமானவை. 

அவர்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டு, நாடற்றவர்களாக்கப்பட்டு, அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்ட வேதனை நிறைந்த வாழ்க்கையே அவர்களுக்கு வரலாறாக மிஞ்சியது என அவர் சுட்டிக்காட்டினார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4