IPL M68 - நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் கிங்ஸ்

#Lanka4 #IPL #T20 #Cricket #Lucknow #Punjab
Prasu
1 month ago
IPL M68 - நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் கிங்ஸ்

19வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 68வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

அந்தவகையில் முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்கள் குவித்தது.

லக்னோ அணி சார்பில், ஆயுஷ் பதோனி 43 ஓட்டங்களும் ஜோஷ் இங்கிலிஷ் 72 ஓட்டங்களும் அப்துல் சமத் 37 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்நிலையில், 197 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி, 18 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்கள் குவித்தது.

பஞ்சாப் அணி சார்பில், பிரப்சிம்ரன் சிங் 69 ஓட்டங்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 101 ஓட்டங்களும் குவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4