சீரற்ற வானிலை - பல பகுதிகளிலும் தொடரும் மழை!
#SriLanka
#weather
#Rain
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
19 hours ago
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலையே இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறிள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )