80 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 18 தங்கச் சங்கிலிகள் கொள்ளை!
சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 18 தங்கச் சங்கிலிகளைக் கொள்ளையிட்ட நபர் ஒருவரை, மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து 02 மோட்டார் சைக்கிள்கள், கொள்ளையடிக்கப்பட்ட 18 தங்கச் சங்கிலிகள் மற்றும் கைது செய்யப்படும் போது அவரிடமிருந்த 17 கிராம் 800 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த நபர் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மஹரகம, ஹோமாகம, மீகொட, மிரிஹான, கொட்டாவ மற்றும் மாலபே ஆகிய பகுதிகளில் தனது கைவரிசையை காட்டியுள்ளார்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், கொள்ளையடிக்கப்பட்ட அனைத்துத் தங்க நகைகளையும் மஹரகம பிரதேசத்திலுள்ள ஒரேயொரு அடகு வைக்கும் நிலையத்திற்கே அவர் விற்பனை செய்துள்ளமைதெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )