ஒன்றாரியோ மாகாண அமைச்சர் கரோலின் முல்ரோனி பதவி விலகல்
ஒன்றாரியோ மாகாணத்தின் முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான கரோலின் முல்ரோனி, பிரீமியர் டக் ஃபோர்டின் அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும் அடுத்த மாதம் தனது பதவியைத் துறக்கவுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது கருவூல வாரியத் தலைவராகவும் பிராங்கோபோன் விவகாரங்கள் அமைச்சராகவும் பணியாற்றி வரும் முல்ரோனி, பிரதமரிடம் தெரிவித்ததாகவும் வரும் ஜூன் 5 அதிகாரப்பூர்வமாக தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக யார்க்-சிம்கோ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒன்றாரியோ அரசாங்கத்தின் அங்கமாகவும் பணியாற்றியது என் வாழ்வின் மிகப்பெரிய பாக்கியங்களில் ஒன்றாகும், இந்த முடிவை நான் எளிதாக எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
முன்னாள் கனடா பிரதமர் பிரையன் முல்ரோனியின் மகளான கரோலின் முல்ரோனி, முதன்முதலில் 2018ம் ஆண்டு யார்க்-சிம்கோ தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கு முன்பு அவர் மாகாணத்தின் தலைமை வழக்கறிஞராகவும் மற்றும் போக்குவரத்து அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )