நாட்டைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு!

#SriLanka #weather #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
நாட்டைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு  ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு!

நாட்டைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு காற்று மற்றும் கடல் அலைக்கான  ஆரஞ்சு நிற  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த எச்சரிக்கை நாளை மாலை 4:30 மணி வரை அமலில் இருக்கும்.

வானிலை ஆய்வுத் துறை தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக கல்பிட்டியாவிலிருந்து பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் பலமான காற்று வீசக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. 

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக சிலாபம் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில், மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 

அத்துடன் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக கல்பிட்டியாவிலிருந்து பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் சுமார் 2.0 முதல் 3.0 மீட்டர் வரையிலான பேரலைகள் ஏற்படக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!