வெசாக் தானம் பெற காத்திருந்த மக்கள் மீது மோதிய கார் - 06 பேர் உயிரிழப்பு!

#SriLanka #Accident #donation #vesak #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 weeks ago
வெசாக் தானம் பெற காத்திருந்த மக்கள் மீது மோதிய கார் - 06 பேர் உயிரிழப்பு!

மீகோடா சந்திப்பில் உள்ள வெசக் தானசாலை அருகே மக்கள் கூட்டத்தின் மீது வாகனம் மோதியதில், மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

ஹோமகமவில் உள்ள மீகோடா பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வாடகைக் கார், சாலையிலிருந்து விலகி, வெசக் தானசாலை அருகே வரிசையில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளது. 

இதில் குறைந்தது 12 பேர் காயமடைந்து ஹோமகம  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )





இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4