பிரான்சில் கமேனியை புகழ்ந்து பயங்கரவாதத்தை நியாயப்படுத்திய மாணவர் கைது
பயங்கரவாதத்தை நியாயப்படுத்தியதற்காகவும் சியோனிச முதலாளித்துவத்திற்கு எதிரான செய்திகளைப் பதிவிட்டதற்காகவும் தனது ஆய்வறிக்கையை ஈரானின் கமெனிக்கு அர்ப்பணித்ததற்காகவும் ஓர்லியன்ஸ் பல்கலைக்கழக முனைவர் பட்ட மாணவர் முகமது ஜவாத் சேலிக்கு பிரெஞ்சு நீதிமன்றம் 18 மாத சிறைத்தண்டனையும், ஐந்து ஆண்டுகள் நாட்டிற்குள் நுழையத் தடையும் விதித்து, அவரை நாடு கடத்தவும் உத்தரவிட்டது.
36 வயதான அந்த மாணவர், முகமது ஜவாத் சேலி, 1990ல் ஈரானில் பிறந்து, 2002ல் தனது 12வது வயதில் லெபனானுக்குக் குடிபெயர்ந்தார்.
அவர் தனது படிப்பிற்காக 2020ல் பிரான்சுக்கு வந்தார். இந்த ஆண்டு ஏப்ரல் 8 அன்று அவர் கைது செய்யப்பட்டார்.
மார்ச் 27 அன்று நடந்த தனது சட்ட முனைவர் பட்ட ஆய்வறிக்கை பாதுகாப்பு நிகழ்வின்போது, ஒரு மாதத்திற்கு முன்பு ஈரானில் "கர்ஜிக்கும் சிங்கம்" நடவடிக்கை தொடங்கப்பட்டபோது நடந்த இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கமேனிக்கு தனது ஆய்வறிக்கையை அவர் அர்ப்பணித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )