கால்நடை இறக்குமதிக்கு தற்காலிக தடை விதித்த கனடா
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கன்றுக்குட்டிகளில் ஆபத்தான ஒட்டுண்ணிப் புழுக்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து கால்நடைகளை இறக்குமதி செய்வதற்கு கனடா தற்காலிகத் தடையை விதித்துள்ளது.
இதன்படி, டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பசுக்கள் மற்றும் குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் கனடாவிற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என கனடா உணவு ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் மாட்டிறைச்சி மற்றும் கால்நடை உற்பத்தியில் முன்னணி மாநிலமாக விளங்கும் டெக்சாஸில், இரண்டாவது கன்றுக்குட்டியிலும் 'நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவோர்ம்'எனப்படும் ஆபத்தான ஒட்டுண்ணி கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க விவசாயத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலைமையைத் தொடர்ந்து, டெக்சாஸ் மாநில ஆளுநர் கிரெக் அபோட், மாநிலத்தில் பேரழிவு அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
இந்த ஒட்டுண்ணி பரவல் கோடைக்காலம் முழுவதும் மேலும் விரிவடையக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவோர்ம்' எனப்படும் இந்த ஒட்டுண்ணி, மனிதர்கள் மற்றும் சூடான இரத்தம் கொண்ட விலங்குகளின் திறந்த காயங்கள் அல்லது உடலின் சவ்வுப் பகுதிகளில் முட்டையிடும் ஈக்களின் மூலம் பரவுகிறது.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )