இயக்குநர் பாரதிராஜா காலமானார்!
#SriLanka
#TamilCinema
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Director Bharathiraja
Thamilini
1 hour ago
இயக்குநர் பாரதிராஜா தனது 84 ஆவது வயதில் இன்று காலாமானர். உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’, ‘கருத்தம்மா என பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
அவரது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய ‘பத்மஸ்ரீ' விருது வழங்கி மத்திய அரசு அவரை கவுரவித்தது. இதுதவிர பல தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களையும், இயக்குநர்களையும் அறிமுகப்படுத்திய ஒரு பல்கலைக்கழகமாக திகழ்ந்தார்.
அவருடைய மறைவுக்கு திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே