முக்கிய போர் விமான திட்டத்தை கைவிடும் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி
ஆறாம் தலைமுறை போர் விமானத்தை கூட்டாக உருவாக்கும் ஒரு முக்கியத் திட்டத்தைக் கைவிடப் போவதாக பிரான்சும் ஜெர்மனியும் அறிவித்துள்ளன.
இந்தத் திட்டம் கைவிடப்படுவதை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு இந்த நிகழ்வு ஒரு பெரும் பின்னடைவாகும்.
சுமார் 116 பில்லியன் டாலர் செலவாகும் என எதிர்பார்க்கப்பட்ட எதிர்காலப் போர் விமான அமைப்பு (FCAS) திட்டம், இத்திட்டத்தில் ஜெர்மனி மற்றும் ஸ்பெயினைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் தலைமை மற்றும் கட்டுப்பாடு குறித்து உடன்படத் தவறியதால் முறிந்து போனதாகக் கூறப்படுகிறது.
இரு நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி மனப்பான்மையே பேச்சுவார்த்தைகள் முறிந்து போனதற்கு முக்கியக் காரணமாக இருந்ததாக நம்பப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே