உலகக் கிண்ணம் 2026: செக் குடியரசை வீழ்த்தி தென் கொரியா அதிரடி வெற்றி!

#SouthKorea #WorldCup #win #ImportantNews #Sports News #L4
Lakhi
1 hour ago
உலகக் கிண்ணம் 2026: செக் குடியரசை வீழ்த்தி தென் கொரியா அதிரடி வெற்றி!

ஃபிஃபா உலகக் கிண்ணம் 2026 தொடரின் A பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் செக் குடியரசை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தென் கொரியா வெற்றி பெற்றுள்ளது. மெக்சிகோவின் குவாடலஜாரா (Guadalajara) மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி, கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் செக் குடியரசு அணியின் லடிஸ்லாவ் முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை தேடித்தந்தார்.

செக் குடியரசு முன்னிலை பெற்ற 8 நிமிடங்களிலேயே, தென் கொரியாவின் ஹ்வாங் இன்-பியோம் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். 77ஆவது நிமிடத்தில், செக் குடியரசு அணியின் டோமஸ் சௌசெக், வலைக்குள் செலுத்தினார். ஆனால், நடுவர் அந்த கோலை நிராகரித்தார்.

 இந்த நிலையில், 80ஆவது நிமிடத்தில் தென் கொரியாவின் ஹியோன்-க்யு கோல் அடித்து கொரியாவின் வெற்றியை உறுதி செய்தார். இதன்படி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 2-0 என வீழ்த்திய மெக்சிகோ அணியுடன் தற்போது தென் கொரியாவும் தலா 3 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4