கனடாவில் கத்தி முனையில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர்
கனடாவின் வினிபெக் நகரில் பருவவயதை அடையாத சிறுமி ஒருவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, மெனிடுாபா அவென்யூவின் 400 வது தொகுதிப் பகுதியில் அச்சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தபோது, வாகனத்தில் வந்த நபர் ஒருவர் அவரை நெருங்கியுள்ளார்.
போதைப்பொருள் மற்றும் மதுபானம் தருவதாக ஆசைவார்த்தை கூறி, அச்சிறுமியை அந்த நபர் தனது வாகனத்திற்குள் அழைத்துள்ளார்.
சிறுமி வாகனத்தினுள் ஏறியதும், அந்த சந்தேக நபர் அருகில் உள்ள ஒரு நடமாட்டமற்ற பகுதிக்கு வாகனத்தைச் செலுத்தி, கத்தி முனையில் சிறுமியை மிரட்டி கொடூரமான பாலியல் வன்புணர்வை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், அங்கிருந்து தப்பிய சிறுமி அருகில் உள்ள தனது குடும்ப உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு ஓடிச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்தே பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த நபரை தேடும் பணி தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும் இதற்காக பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே