பிள்ளையானின் உண்மை முகம் : மறக்கவோ மன்னிக்கவோ முடியாது - பிள்ளையான் வெறும் வேட்டை நாய் மட்டுமே
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2008 காலப்பகுதியில் இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்கள் இன்று மீண்டும் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் மீண்டும் இந்த வழக்குகளின் மையப்புள்ளியாக மாறியுள்ளார்.
இந்த விசாரணைகள் வெறும் தனித்தனி குற்றச் சம்பவங்களாக அல்லாமல், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல்–ஆயுத வலையமைப்பின் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களாகவே பார்க்க படுகின்றன!
2008 ஜனவரி 9ஆம் தேதி காத்தான்குடி கல்லடி முருகன் கோயில் அருகே இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இந்த தொடரின் முக்கிய வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் உள்ளூர் பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டாலும், பின்னர் அந்த விசாரணை முடங்கியதாக அல்லது மைடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த வழக்கு B49/2008 என்ற இலக்கில் மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ராஷிக் மொஹமட் பாஃயிஷ் (பொலிஸ் பாஃயிஷ் என அறியப்படுபவர்) முதன்மை சந்தேகநபராகவும், ஹமீட் லெவ்வை முஹம்மட் ஷாஹிட் இரண்டாவது சந்தேகநபராகவும், சிவனேசதுரை சந்திரகாந்தன் மூன்றாவது சந்தேகநபராகவும் பெயரிடப்பட்டுள்ளதாக விசாரணை கோப்புகள் தெரிவிக்கின்றன.

2008 மே 22ஆம் தேதி காத்தான்குடி பிரதான வீதியில் இடம்பெற்ற சாந்தன் எனப்படும் பிள்ளையான் குழு உறுப்பினரின் பாதுகாவலர் சுட்டுக் கொலை சம்பவம் B349/2008 என்ற வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையில், இது பிள்ளையானின் அதிஉச்ச கோபத்தினால் இடம்பெற்ற பழிவாங்கல் சம்பவமாக இருக்கலாம் என சில சாட்சிகள் கூறியுள்ளதாகவும், குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பான தகவலை இந்த நபர் வெளிப்படுத்தியதனால் ஏற்பட்ட கோபம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக ஹமீட் லெவ்வை ஷாஹிட் இரகசிய வாக்குமூலம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
2008 ஆகஸ்ட் 20ஆம் தேதி வவுணதீவு பகுதியில் “போடியார்” என அழைக்கப்பட்ட அழகுதுரை தர்மலிங்கம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் B789/2008 என்ற வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ராஷிக் மொஹமட் பாஃயிஷ், அப்துல் காதர் முஹம்மட் சிபான் (இராணுவ புலனாய்வு துறை தொடர்புடையவர் என கூறப்படும் நபர்) மற்றும் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் பிரதான சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று முக்கிய வழக்குகளுடன் சேர்த்து மேலும் சில 2008 காலகட்ட கொலைச் சம்பவங்களும் ஒரே வலையமைப்பின் பகுதியாக இணைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவங்கள் அனைத்தும் காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் ஒரே செயல்பாட்டு சூழலில் நடந்ததாக விசாரணை தரப்புகள் கூறுகின்றன.
விசாரணையின் மிக முக்கிய திருப்பமாக, இந்த குழுவுடன் தொடர்புடைய சில நபர்கள் தற்போது 127வது சட்ட பிரிவின் கீழ் அரச சாட்சிகளாக மாறி நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். அவர்களின் வாக்குமூலங்கள் கடந்த காலத்தில் மறைந்திருந்த பல கொலைச் சம்பவங்களை மீண்டும் வெளிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக ஹமீட் லெவ்வை முஹம்மட் ஷாஹிட் 2025 ஆகஸ்ட் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டு, கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குமூலம் இந்த வழக்குகளின் விசாரணையில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
விசாரணை ஆவணங்களில் மேலும் குறிப்பிடப்படும் ஒரு அம்சம் என்னவென்றால், போலீஸ் பாஃயிஷ் தலைமையில் சுமார் 17 புலனாய்வு அதிகாரிகள் கொண்ட ஒரு குழு செயல்பட்டதாகவும், சில ஆயுதங்கள் மற்றும் நடவடிக்கை ஒருங்கிணைப்பு இலங்கை இராணுவ புலனாய்வு அமைப்பின் மூலமாகவே நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், அப்துல் காதர் முஹம்மட் சிபான் போன்றோர் இந்த அமைப்பில் முக்கிய பங்கு வகித்ததாகவும் விசாரணை தரப்புகள் தெரிவிக்கின்றன. தற்போது பிள்ளையான் தடுப்புக்காவலில் உள்ள நிலையில், மற்ற முக்கிய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால் ராஷிக் மொஹமட் பாஃயிஷ் இன்னும் கைது செய்யப்படாமல் வெளிநாட்டில் (இங்கிலாந்து) இருப்பதாகவும், அவர் தொடர்புடைய விசாரணைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மொத்தத்தில், இந்த வழக்குகள் தனித்தனி கொலைச் சம்பவங்களாக மட்டும் இல்லாமல், கிழக்கு மாகாணத்தில் ஒரு காலகட்டத்தில் இயங்கிய அரசியல் அதிகாரம், ஆயுதக் குழு செயற்பாடு மற்றும் பாதுகாப்பு துறை தொடர்புகள் இணைந்த ஒரு பரந்த வலையமைப்பின் பகுதியாகவே தற்போது உணரப்பட்டு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளன!
மொத்தத்தில் பிள்ளையான் என்ற ஒற்றை நபரால் இது சாத்தியமா என்றால் இல்லவே இல்லை. ஆனால் இவரை இயக்கியது யார் என்ற தகவல்கள் நாளுக்கு நாள் வெளிவருவது சிலருக்கு ஆச்சரியமானாலும் பலர் அதில் தெளிவாகவே உள்ளனர் ஆனால் பிள்ளையான் போன்ற நபர்கள் உலகிற்கு ஒரு பாடம் “ தெய்வம் நின்று கொல்லும்”
தகவல்:
செல்வக்குமார் கமல நாதன்
நன்றி
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே