நடிகை சமந்தாவிற்கு இலகுவானது எது? : நடனமா? சண்டையா?
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.
சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்துள்ள அவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதுடன் தயாரிப்பாளராகவும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், சமந்தா தயாரித்து நடித்துள்ள புதிய திரைப்படமான 'மா இன்டி பங்காரம்' வருகிற 19ம் திகதி வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்க அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில், “என்னைப் பொறுத்தவரை நடனக் காட்சிகளை விட சண்டைக் காட்சிகளில் நடிப்பது மிகவும் எளிது. இந்தப் படத்தில் மெதுவாக நகரும் காட்சிகளோ, ஒருவரை அடித்தவுடன் அவர் வானத்தில் பறப்பது போன்ற காட்சிகளோ இல்லை. எங்களால் முடிந்தவரை இயல்பான சண்டைக் காட்சிகளையே படமாக்கியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே