தமிழக முதல்வருடன் கைகோர்த்த பிரபல இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்

#Tamil Nadu #TamilCinema #Director #Lanka4 #Vijay #ChiefMinister #Politics #L4
Prasu
2 hours ago
தமிழக முதல்வருடன் கைகோர்த்த பிரபல இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்

1988ம் ஆண்டு ‘உரிமை கீதம்’ திரைப்படத்தினை இயக்கி திரையுலகிற்குள் இயக்குனராக அறிமுகமான ஆர்.வி. உதயகுமார் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து அரசியல் பயணத்தின் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.

கிழக்கு வாசல், சின்ன கவுண்டர், சிங்கார வேலன், எஜமான், பொன்னுமணி, ராஜகுமாரன், சுபாஷ் என பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். 

இவர் திரையுலகில் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும், பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா நடந்தது. அதில் த.வெ.க.வில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார். 

அமைச்சர்கள் என். ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார்.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் இதற்கு முன்னதாக அதிமுக கட்சியின் கலை பிரிவு செயலாளர் பதவி வகித்து வந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4