பதவி விலகுகிறார் ஸ்டாமர்? நாளைய தினம் முடிவு - நம்பத்தகுந்த வட்டாரம் தகவல்!
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகுவார் என்றும், அவர் வெளியேறுவதற்கான கால அட்டவணையை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக ' the Observer செ்யதித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சரவை அமைச்சர்கள், ஆலோசகர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேசிய பிறகு, பதவி விலகுவது குறித்து ஸ்டாமர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கமைய நாளைய தினம் அவர் பதவி விலகுவது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அந்த செய்தித் தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் தனது பதவிக்காலம் முடியும் வரை அவர் ஆட்சி செய்வார் என்றும் ஸ்டாமருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பல மாதங்களாக உருவாகி வந்த ஸ்டார்மரின் பதவிக்கான அச்சுறுத்தல், ஆண்டி பர்ன்ஹாம் இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்றப்பின் தீவிரமடைந்துள்ளது.
இந்த வெற்றி, அவர் தலைமைப் பதவியை ஏற்க முறைப்படி வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே