132 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது!
#SriLanka
#China
#Arrest
#Ciggerette
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
132 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவந்த வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை கட்டுநாயக்க வருகை முனையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்த மேலதிக விவரங்கள் வெளியிடப்படவில்லை. சந்தேக நபர் ஒரு சீன தொழிலதிபர் என்று கூறப்படுகிறது.
அவர் சீனாவிலிருந்து தாய்லாந்தின் பாங்காக்கிற்கு வந்து, அங்கிருந்து இன்று காலை தாய் ஏர்வேஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே