வங்கியின் பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டு தங்க நகைக் கொள்ளை - மூவருக்கு வலைவீச்சு!

#SriLanka #Bank #Robbery #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
வங்கியின் பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டு தங்க நகைக் கொள்ளை - மூவருக்கு வலைவீச்சு!

மொரகஹஹேனாவின் கோரலைமா பகுதியில் உள்ள கிராமிய வங்கியின்  பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டு அதில் இருந்து தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன. 

இன்று (23) அதிகாலை 1.00 மணியளவில் வங்கி வளாகத்திற்குள் நுழைந்த இந்தக் குழு, அங்கு இருந்த பாதுகாப்பு ஊழியர்களைக் கட்டிப்போட்டுவிட்டு, வங்கியின் பின்புறம் உள்ள குளியலறை ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பின்னர் அவர்கள் அங்குள்ள பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து, உள்ளே வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைத் திருடிவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4