செருப்பு மாலை முதல் அரசியல் கைதி விடுதலை வரை : மன்றில் ஆவேசமாக பேசிய அர்ச்சுனா!
தனது உருவப்படுத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்று மன்றில் பேசியிருந்தார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் அர்ச்சுனா பேசிய விடயங்கள் வருமாறு,
“அண்மையில் எனது உருவப்படத்திற்குச் செருப்பு மாலை ஒன்று போடப்பட்டது. தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஒப்படைப்பதற்கு நான் ஆதரவு வழங்குவதாலேயே, கஜேந்திரகுமாரின் கட்சியினர் எனக்குச் செருப்பு மாலை போட்டிருந்தனர்.
கிளிநொச்சி வைத்தியசாலையையும் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வாருங்கள்; அதற்கும் நான் எனது முழு ஆதரவை வழங்குவேன். எனக்குச் சில்லறைத்தனமாக அரசியல் நடத்தத் தெரியாது. இந்த அரசாங்கம் மக்களுக்கு நல்லது செய்தால் நான் அதனை ஆதரிப்பேன்.
தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுங்கள், உங்களுக்கு (அரசாங்கத்திற்கு) முழு ஆதரவைத் தருகின்றேன்.
அதேபோல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள், அதற்கும் ஆதரவு தருகின்றேன். நான் சுயலாபத்திற்காக அரசியல் நடத்துபவன் அல்ல. மக்கள் வாழ்ந்தால் அதுவே எனக்குப் போதும். அவ்வளவுதான் எனது அரசியல்” என்றார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே