சர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகை திரிஷா

#Actress #TamilCinema #Lanka4 #Birthday #Vijay #ChiefMinister #L4
Prasu
2 hours ago
சர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகை திரிஷா

தமிழக முதல் அமைச்சர் விஜய் நேற்று தனது 52வது பிறந்த நாளைக் கொண்டாடினார். விஜய் பிறந்த நாளுக்கு அவரின் ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

விஜய்யுடன் நடித்த சக நடிகைகள், நடிகர்கள் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து பதிவிட்டனர். அந்த வகையில், விஜய்யுடன் பல படங்களில் ஒன்றாக நடித்த நடிகை திரிஷா வாழ்த்து சொல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், திரிஷா நேற்று வாழ்த்து தெரிவிக்கவில்லை. கடந்த ஆண்டு பிறந்த நாளுக்கு முதல் ஆளாக வாழ்த்து சொன்ன திரிஷா, நேற்று விஜய்யின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லாதது அவரது ரசிகர்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகை திரிஷா விஜய்க்கு ஒருநாள் கழித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய்க்கு கேக் பரிசளித்து அவருடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக்கும் அந்த நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" என் பதிவிட்டுள்ளார். 

மேலும், முதல் நபராக வாழ்த்து தெரிவித்துள்ளதை குறிப்பிடும் விதமாக நேரத்தையும் அப்பதிவில் 00:00 என குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4