முல்லைத்தீவு கல்விளான் பகுதியில் சோகம்: குளத்தில் மூழ்கி இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

#SriLanka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
முல்லைத்தீவு கல்விளான் பகுதியில் சோகம்: குளத்தில் மூழ்கி இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கல்விளான் குளத்தில் மூழ்கி 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் (25.06.2026) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் தூண்டில் சகிதம் மீன்பிடிக்கச் சென்ற குறித்த இளைஞர் வீடு திரும்பாத நிலையில், அவரது தந்தையார் தேடிச் சென்றுள்ளார்.

இதன்போது இன்று (26.06.2026) காலை கல்விளான் குளத்தில் மிதந்த நிலையில் இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்தவர் கல்விளான் பகுதியைச் சேர்ந்த கண்ணையா அன்பரசன் (வயது 26) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞருக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும், மீன்பிடிக்கச் சென்றபோது வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக குளத்தில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4