முழு அரச மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட பாக்யராஜின் உடல்
#Death
#Actor
#TamilCinema
#Director
#Lanka4
#Chennai
#L4
Prasu
4 hours ago
தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் தனக்கென தனி இடத்தைப் பிடித்த பாக்யராஜ் தனது 73வது வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் காலமானார்.
இந்நிலையில், கே. பாக்யராஜின் உடலுக்கு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரச மரியாதை வழங்கப்பட்டது.
இதனையடுத்து பாக்யராஜின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அவரது மறைவுக்கு திரையுலகம், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவரது திரைத்துறைக்கான மகத்தான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு முழு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே