**காங்கேசன்துறை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது**

#SriLanka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 day ago
**காங்கேசன்துறை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது**

காங்கேசன்துறை முதல் மன்னார், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (28) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (29) முற்பகல் 11.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

இதேவேளை மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலாபம் முதல் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் 2.0 முதல் 3.0 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை குறித்து கடற்படையினரும் மீனவ சமூகத்தினரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4