மகளிர் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணி
#India
#Australia
#Women
#LANKA4
#T20
#WorldCup
#L4
Prasu
3 months ago
10வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதின.
நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் 56 ஓட்டங்களும் ஸ்மிருதி மந்தனா 38 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து இலக்கை அடைந்தது.
ஆஸ்திரேலிய அணி சார்பில், பெர்ரி 56 ஓட்டங்களும் கார்ட்னர் 53 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.