முதல் முறையாக அயர்லாந்துக்கு எதிரான T20 தொடரை இழந்த பிரபல இந்திய அணி
அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
முதல் போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற்றது.
பெல்ஃபாஸ்ட் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 154 ஓட்டங்கள் எடுத்தது.
அயர்லாந்து சார்பில் ஹேரி டெக்டர் 53 ஓட்டங்களும் பென் கலிட்ஸ் 37 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்நிலையில், 155 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி சார்பில், திலக் வர்மா 55 ஓட்டங்களும் ஷிவம் துபே 20 ஓட்டங்களும் ஹர்ஷித் ராணா 21 ஓட்டங்களும் குவித்தனர்.
இறுதியில், அயர்லாந்து அணி 1 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக T20 தொடரை கைப்பற்றியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே