நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கோர நடவடிக்கை!
#SriLanka
#retirement
#Judge
#Court
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 hours ago
உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோர சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 4ஆம் திகதி இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்குழு அண்மையில் கூடிய போது மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த முன்மொழிவை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுக்கவும் சட்டதரணிகள் தீர்மானித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே