மும்பை பாந்த்ரா கடற்கரையில் 26 அடி திமிங்கலம் கரை ஒதுங்கி உயிரிழப்பு!
மும்பையின் பாந்த்ரா கடற்கரை பகுதியில் 26 அடி நீளமுள்ள ஹம்பேக் திமிங்கலக்(Humpback) குட்டி கரை ஒதுங்கியது,. கரை ஒதுங்கிய திமிங்கலம் உயிருடன் இருப்பதை கண்டுபிடித்த பாந்த்ரா - வெர்சோவா கடல்வழித் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அதை உடனடியாக மீட்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கினர். மீட்பு முயற்சியில் வனத்துறையின் சதுப்புநிலப் பிரிவு, மும்பை மாநகராட்சி, தீயணைப்புத் துறை, வனவிலங்கு மருத்துவர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் என பலர் திரண்டு வந்து திமிங்கலத்தை மீட்டு ஆழ்கடல் பகுதியில் பாதுகாப்பாக விட முயற்சி செய்தனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக திமிங்கலத்தின் உடல்நிலை மோசமடைந்து அசைவுகளை நிறுத்தியதால், அது உயிரிழந்துவிட்டதாக மீட்புக் குழுவினர் உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி, முறையான பரிசோதனைகள் மற்றும் வழக்கமான நடைமுறைகளுக்கு பிறகு திமிங்கலத்தை அடக்கம் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே