பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகளுக்கு தடை விதிக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

#School #America #Lanka4 #sports #transgender #Banned #L4
Prasu
1 hour ago
பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகளுக்கு  தடை விதிக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

பெண்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகள் போட்டியிடுவதை மாநிலங்கள் தடை செய்யலாம் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பங்கேற்பதற்கான தடைகளை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த இரண்டு வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் வழக்குகளை இன்று நீதிமன்றம் பரிசீலித்தது. 

இடாஹோ மற்றும் மேற்கு வர்ஜீனியா ஆகிய அந்த இரண்டு மாநிலங்களும், பொதுப் பள்ளி மற்றும் கல்லூரி விளையாட்டு அணிகள், பிறப்பின்போது பதிவுசெய்யப்பட்ட பாலினத்திற்கு ஏற்பவே போட்டியிட வேண்டும் என்று சட்டங்களை இயற்றியிருந்தன.

இந்தத் சட்டம், அமெரிக்க அரசியலமைப்பில் உள்ள சம உரிமைப் பாதுகாப்புகளை மீறுவதாக இரண்டு வழக்குகளில் ஒன்று கூறியது. மற்றொன்று, இது குடிமை உரிமைகள் சட்டங்களுக்கு முரணானது என்று தெரிவித்துள்ளது.

2020ல் இடாஹோ மாநிலம் தடை விதித்ததிலிருந்து, இருபதுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் இத்தகைய தடைகளை இயற்றியுள்ளன.

அந்த மாநிலத் தடைகளின் கீழ், ஒரு திருநங்கை: அதாவது, உயிரியல் ரீதியாக ஆணாக இருந்து தன்னை ஒரு பெண்ணாக அடையாளப்படுத்திக் கொண்டவர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் போட்டியிட அனுமதிக்கப்படுவதில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4