INDvsENG T20- இங்கிலாந்துக்கு எதிராக 179 ஓட்டங்கள் குவித்த இந்தியா
#India
#Lanka4
#T20
#Cricket
#England
#L4
Prasu
2 hours ago
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இத்தொடரில் ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டிக்கான நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்கள் குவித்தது.
இந்திய அணி சார்பில், அபிஷேக் 59 ஓட்டங்களும் ஷ்ரேயஸ் ஐயர் 68 ஓட்டங்களும் சிவம் துபே 42 ஓட்டங்களும் குவித்தனர்.
பந்துவீச்சில், சக்கிப் மோஹமூத் 3 விக்கெட்களும் சாம் கர்ரன் மற்றும் ஆதில் ரஷீத் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே