கமேனியின் இறுதிச் சடங்கு முடிந்த உடன் அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க ஈரான் இணக்கம்!
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு முடிந்த உடனேயே அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக கத்தார் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையேயான முக்கிய பேச்சுவார்த்தை, கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று ஆரம்பமாகிய நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கட்டார் அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி , இப்பேச்சுவார்த்தை நேர்மறையான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகவும், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையைத் தொடர ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கத்தாரும் பாகிஸ்தானும் மத்தியஸ்தர்களாகச் செயல்பட்டு, இரு தரப்பினருடனும் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் முடிவுகளின் அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் அவர் மேலும் கூறினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே