முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் கேரள கஞ்சா கடத்தல் - இளைஞர் கைது!

#SriLanka #Arrest #drugs #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் கேரள கஞ்சா கடத்தல் - இளைஞர் கைது!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் காரில் கஞ்சா போதைப் பொருளை கடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவர் 31 வயதுடைய நபராவார். 

வவுனியா - நெடுங்கேணி பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று (30.06) இரவு பெரியகுளம் சந்தி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியில், சொகுசு கார் ஒன்றினை சோதனை செய்த போது அதில்  78 கிலோகிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. 

 நெடுங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4