முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேசிய திமுக அமைச்சர் கைது
திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமானவர் அனிதா ராதாகிருஷ்ணன் முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக, தவெக நகரச் செயலாளர் செல்வம், ஆத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், ஆத்தூர் காவல்துறையினர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர். "ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளால் பொதுமக்கள் அடைந்துள்ள அதிருப்தி குறித்து பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் விமர்சித்து பேசினேன்.
அரசியல் உள்நோக்கத்துடன் போலீசார் என் மீது இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர் எனவே இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டுமென அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
7வது முறையாக எம்.எல்.ஏவாக இருக்கும் ஒரு அரசியல்வாதி இப்படி பேசுவதை ஏற்க முடியாது எனக்கூறிய நீதிபதி இளந்திரையன் அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே